நில்லாத நினைவுகளில், அருகிலும், தொலைவிலும், கண்களுக்கு தென்படாத, காதுகளுக்கு கேட்காத, உணர்வினால் மட்டுமே உணரக்கூடிய நிகழ்வுகளை பதிவு செய்திருக்கின்றேன். இமைகளுக்குள் அடைக்கப்பட்ட இதயத்தின் உணர்வுகளை வெளியே எடுத்து, இதமான வரிகளாக என்னால் இயன்றவரை இயம்பி இருக்கின்றேன்.